மேற்க்குத்தொடர்ச்சி மலையிலிருந்து ஓர் எழுத்தாளன்

ஸ்டீமிட்டில் வலம் வரும் தமிழர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. கை விரல்களால் எண்ணி விடலாம் என்பது என் கருத்து. ஆரம்ப காலத்திலேயே இப்படி ஒரு இடம் இருக்கிறது என்பதை அறிந்து விட்டோமே என்றெண்ணி மிகவும் பெருமைப்படுகிறேன். இனி வரும் எம்மொழியின மக்களுக்கு ஒர் முன்னுதாரணமாக திகழக்கிடைத்திருக்கும் இப்பெரும் வாய்ப்பு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது!

Image is from the book Kallikkaattuu Ithihaasam by vairamuthu.

என் பெயர் சத்யா. பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து என மண் வாசம் கொண்ட கலைஞர்கள் உருவான தேனி மாவட்டம் தான் நான் பிறந்த ஊர். வாசிப்பை நேசிக்கும் என் மனதை கவர்ந்த நூல்களுல் எம்மண்ணின் மைந்தன் வைரமுத்துவின் கருவாச்சிக்காவியமும் ஒன்று. அதைப்பற்றி சற்று பேசி விடலாம் என எண்ணுகிறேன்.

எங்கள் வட்டாரநடையில் எழுதப்பட்ட கிராமிய புத்தகம் கருவாச்சிக் காவியம். என் சிறு வயதின் சில நாட்களை ஒரு கிராமத்தில் கழிக்க நேர்ந்தது. கிராமம் என்றால் வளர்ச்சி எட்டாத ஒரு குக்கிராமம். அதற்க்கு ரெங்கப்பநாயக்கன்பட்டி எனப்பெயர். சரியாக இரண்டு வருடங்கள் அக்கிராமத்தின் ஒரங்கமாக எங்கள் குடும்பம் திகழ்ந்தது. புல் மேய்ந்த மண் குடிசைகள், இல்லாத புல்லை தேடித்தின்கின்ற செம்மறியாட்டுக் கூட்டம், பல் போன கிழவிகள், சொந்தம், பந்தம்… அனைத்துமே என் மூளையில் மிகக்கச்சிதமாக பதிவாகி விட்டிருக்கின்றன. சில நேரங்களில் சிந்தனையை திருப்பி விட்டு பழையதையெல்லாம் அசை போட்டு அழுவதும் என் வாடிக்கை!

வைரமுத்து பல ஆண்டுகள் கொண்டு கடைந்தெடுத்த புத்தகம் கருவாச்சிக் காவியம். இரண்டே நாட்களில் அதை முழுவதுமாக படித்து முடித்து விட்டேன். என் சிறு வயதில் நான் கண்டறிந்த, கேட்டறிந்த ஒவ்வொரு சிறு சலனங்களையும் உருக்கலையாமல் அப்படியே என் கண்முன் கொண்டுவந்து நிறுத்தி என் கண்களை கலங்க வைத்த ஒப்பற்ற இதிகாசம் இப்புத்தகம். சாதி மத கோட்பாட்டின் கீழ் படிப்பேதென்றரியாது வாழும் இனத்தில் ஒருவளாக பிறக்கும் பாமரப்பெண் கருவாச்சியின் வாழ்க்கைப்பதிவு தான் இக்கதை. பெண்களின் அவலநிலை ஏதென்றறியாதவர்களல்ல நாம். ஒரு பெண்ணாக பிறப்பதை இழிவாக காணும் மனப்பான்மை இன்னும் ஓய்ந்த பாடில்லை. இதுவே ஒர் எழுபது ஆண்டுகள் பின்னுக்கு போனால் அங்கே பெண்களை காண இயலாது, பெண்கள் என்ற பெயரில் நடமாடும் அடிமைகளை மட்டுமே காண முடியும்.

கருவச்சிக்காவியம் ஒர் சரித்திரப்பதிவு. வாழ வழி ஏதுமின்றியும் எதிர்நீச்சல் போட்டு வாழத்துணிந்த சாதனைப் பெண் கருவாச்சி. ஒரு பெண் தான் மகளாக, தாயாக, துணையாக ஒவ்வொரு பரிமாணத்திலும் எவ்வளவு துன்பங்களை சந்திக்க நேர்கிறது? இவைகளையெல்லாம் மனத்தைரியமும் துணிச்சலும் கொண்டு உடைத்தெறிந்த வீரப்பெண்மணி கருவாச்சி. வாசிக்கும் போது வாசகன் கல்லாக இருந்தாலும் அவன் மனதை கரைத்து கண்ணீரை வர வைக்கும் ஒர் அற்புதமான எழுத்து நடையை வைரமுத்து கையாண்டிருக்கிறார்.

இறப்பதற்க்கு முன் ஒர் தமிழன் கண்டிப்பாக படித்திருக்க வேண்டிய புத்தகம் கருவாச்சிக்காவியம். நீங்கள் வாசிப்பீர்கள் என நம்புகிறேன்.

 

Content is original and written by me in the language Tamil. I am,

@sathyasankar

Posted by Sathya Sankar

I am a mechanical engineer. My passion lies in exploring the depths of Science, History and Agriculture. I'm a professional blogger since last five years. I have sound knowledge in dealing with science and various academic topics.

Leave a Reply